உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 27, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
திருப்பதி, ஆக. 28–
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில், ஆட்டோவில் சென்ற ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பல்நாடு மாவட்டம் சிலகலுரிபேட்டை அருகேயுள்ள நரசரோவ்பேட்டை பஸ் ஸ்டான்ட் நோக்கி பஸ் சென்றது.
கலாமந்திர் சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே கொண்டமஞ்சலுாருவில் நடந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு சிலகலுரிபேட்டை அருகேயுள்ள வேலுரு நோக்கி 15 பயணியருடன் தவறான பாதையில் திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ மீது பஸ் மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற ஏழு பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயம் அடைந்தனர்.
