UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:14 PM
அமராவதி: மஹாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதியதில், ஏழு பேர் பலியாகினர்; 19 பேர் படுகாயமடைந்தனர்.
மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் சிந்தி மேகே பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழு, புல்தானா மாவட்டத்தின் ஷேகானில் இருந்து நவராத்திரி விழாவுக்காக, துர்கா தேவி சிலையை தங்கள் பகுதிக்கு நேற்று அதிகாலை எடுத்து சென்றனர்.
அப்போது, அமராவதி மாவட்டத்தின் தமன்கான் ரயில் நிலையம் அருகே சம்ருதி விரைவுச்சாலையில் சென்றபோது, பின்பக்கத்தில் வந்த சரக்கு லாரி, வேன் மீது வேகமாக மோதியது. இதில், வேனில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, மேலும் இருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வரும் 19 பேரில், பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
