ADDED : நவ 24, 2024 07:18 AM

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அனந்த்புர் மாவட்டத்தில் திம்மம்பெட்டா அருகே விவசாய கூலி வேலையை முடித்து விட்டு, கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர் சென்ற ஆட்டோ தலகாசிப்பள்ளியை அருகே சென்ற போது, ஆந்திர அரசு பஸ் ஒன்று வேகமாக மோதியுள்ளது.
இதில், நிலைகுலைந்து போன ஆட்டோ சுக்குநூறானது. இதில், நாகம்மா, ராமன்ஜினம்மா, பாலபெட்டையா உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புட்லுர் மண்டலில் உள்ள எல்லுட்லா கிராமத்தைச் சேர்ந்த 13 கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் பயணித்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.