உத்தர பிரதேசத்தில் விபத்து புதுமண தம்பதி உட்பட 7 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் விபத்து புதுமண தம்பதி உட்பட 7 பேர் பலி
ADDED : நவ 17, 2024 07:48 AM

பிஜ்னோர் : உ.பி.,யின் தாம்பூரைச் சேர்ந்த குர்ஷித், 65, என்பவர் தன் குடும்பத்துடன், ஜார்க்கண்டில் நிகழ்ந்த திருமண நிகழ்வில் பங்கேற்க சென்றார்.
திருமணம் முடிந்ததும், தன் சொந்த ஊருக்கு ஆட்டோவில் நேற்று திரும்பினார். டேராடூன் - நைனிடால் நெடுஞ்சாலையில் தாம்பூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை, ஆட்டோ டிரைவர் முந்த முயன்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில், சாலையில் உள்ள மின் கம்பத்தின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இதில், உள்ளே இருந்த புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் துாக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே அனைவரும் பலியாகினர்.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன், படுகாயங்களுடன் இருந்த டிரைவர் அஜப் சிங், காரில் இருந்த இருவர் என மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்ததில், டிரைவர் அஜப் சிங், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.