இருவேறு சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி: ஆந்திராவில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி
இருவேறு சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி: ஆந்திராவில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி
ADDED : செப் 22, 2024 10:19 AM

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் இன்று(செப்.,22) நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், அனந்தபுரத்தில் இருந்து நர்பலா நோக்கி சென்ற கார், ரெகுலகுண்டா என்ற இடத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், திருப்பதி அருகே சிலக்கூரில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பதி திரும்பும் வழியில் கார் விபத்தில் சிக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மட்டும் ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.