ADDED : செப் 29, 2024 07:19 AM

சிக்கமகளூரு : சிக்கமகளூரு அஜ்ஜாம்புரா அருகே கெஞ்சாபுரா கிராமத்தில் வசிப்பவர் அசோக். இவரது மகன் சோனேஷ், 7. கடந்த 24ம் தேதி கடுமையான காய்ச்சலால் சோனேஷ் பாதிக்கப்பட்டார்.
டாக்டரான வருண் என்பவரின் கிளினிக்கிற்கு பெற்றோர் அழைத்து சென்றனர். காய்ச்சல் குறைவதற்கு ஊசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்றதும் சோனேஷின் உடலில் கொப்புளம் ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை சிகிச்சைக்காக ஷிவமொக்கா தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் இரவு சோனேஷ் இறந்தார். டாக்டர் வருண், 'ஓவர் டோஸ்' மருந்து கொண்ட ஊசியை போட்டதால், சோனேஷ் இறந்ததாக கூறி, அஜ்ஜம்புரா டவுன் போலீசில், பெற்றோர் புகார் செய்தனர்.
விசாரணையில் வருண் ஆயுர்வேத டாக்டர் என்பதும், ஊசி போடும் அதிகாரம் அவருக்கு இல்லாததும் தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.