ADDED : ஜன 13, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்ரேலி,: குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தின் சித்ராசர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள பருத்தி வயலுக்கு அருகே நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அருகே உள்ள வனப்பகுதிக்குள் இருந்த சிறுத்தை, சிறுமியை தாக்கி தப்பியோடியது.
சிறுமி அலறியதை கேட்டு, வயலில் பணியாற்றிய அவரது பெற்றோர், ஓடிச்சென்று பார்த்தபோது கழுத்தில் படுகாயங்களுடன் தங்கள் மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அருகே உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அச்சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க எட்டு தனிப்படைகளை வனத்துறையினர் அமைத்துஉள்ளனர்.