காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
ADDED : ஜன 07, 2024 01:20 PM

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்கள் கூட பிரதமர் மோடிக்கு ஆதரவளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஓராண்டாக கல்வீச்சு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ககன்யான் திட்டத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் தொற்று காரணமாக அது தாமதமானது. இருப்பினும், 2025ம் ஆண்டின் முதல் பாதியில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.