ADDED : ஆக 14, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரளாவில் தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 70 வயது டாக்டர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே பாலா பகுதியை சேர்ந்தவர் ராகவன், 70. அரசு பொது மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது வீட்டின் அருகில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இங்கு நேற்று முன்தினம், 23 வயதான இளம்பெண் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, டாக்டர் அப்பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்க்க வைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அங்கிருந்து வெளியேறி வீட்டில் பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்படி, டாக்டர் ராகவனை பாலா போலீசார் நேற்று கைது செய்தனர்.