ADDED : பிப் 14, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று முன் தினம் மட்டும் 71 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணியர் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் என டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகளின் போராட்டம் காரணமாக, தலைநகர் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, நேற்று முன்தினம் மட்டும் டில்லி மெட்ரோ ரயில்களில் 71.9 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டதில் இருந்து, ஒருநாளின் அதிகபட்ச பயணியர் எண்ணிக்கையில், இதுவே மிக அதிகம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி 71.3 லட்சம் பேரும், ஆகஸ்ட் 29ம் தேதி 69.94 லட்சம் பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

