ADDED : பிப் 01, 2025 11:12 PM

மொத்தம் உள்ள, 23 ஐ.ஐ.டி.,க்களில், 2014க்குப் பின் துவங்கப்பட்ட 5 ஐ.ஐ.டி.,க்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்சி., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித்தொகை கூடுதலாக 10,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
திறன் மேம்பாட்டுக்கான ஐந்து தேசிய மையங்கள் அமைக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50,000 அரசு பள்ளிகளில், 'அடல் டிங்கரிங்' பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
அனைத்து அரசு இடைநிலைப் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'பிராட்பேண்ட்' இணைய சேவை வசதி செய்யப்படும். 500 கோடி ரூபாய் செலவில், கல்வித்துறைக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ படிப்பில் கூடுதலாக 75,000 இடங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் ஆண்டிற்கு மேலும் 10,000 இடங்கள் ஒதுக்கப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நிறுவப்படும். 2025 - 26ல் மட்டும், 200 மையங்கள் திறக்கப்படும்.