தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பயங்கரவாத தொடர்பு: குஜராத்தில் 8 பேர் கைது

பயங்கரவாத தொடர்பு: குஜராத்தில் 8 பேர் கைது

பயங்கரவாத தொடர்பு: குஜராத்தில் 8 பேர் கைது


UPDATED : ஜூலை 04, 2026 03:57 PM

ADDED : ஜூலை 04, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 03:57 PM ADDED : ஜூலை 04, 2026 03:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்;குஜராத்தில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, குஜராத்தில் தன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும், சதி திட்டத்தை தீட்ட அமைப்புக்கு ஆட்சேர்ப்பதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதே போல மத்திய பிரதேசத்திலும் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தில் பயங்கரவாத அமைப்பின் நெட்வொர்க்கை விரிவுபடுத்த முயன்றதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

கைதானவர்களில் இருவர், 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us