ADDED : பிப் 20, 2024 07:08 AM
பெங்களூரு: சட்டசபையில் நேற்று, எட்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கர்நாடக சட்டசபையில், நேற்று கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், கூட்டுறவு சங்கங்களின் நியமன இயக்குனர்களின் எண்ணிக்கை, மூன்றாக உயரும்.
இத்துடன், பெங்களூரு மாநகராட்சி சட்ட திருத்த மசோதா; சில சட்டங்கள் மற்றும் பிராந்திய சட்டங்களை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா; சாமுண்டீஸ்வரி தொகுதி மேம்பாட்டு ஆணைய சட்ட மசோதா.
ஹிந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா; காட்டி சுப்பிரமணிய கோவில் மேம்பாட்டு ஆணைய சட்ட மசோதா; ஹுலிகெம்மா கோவில் மேம்பாட்டு ஆணைய சட்ட மசோதா; பணிபரியும் சிவில் பொறியாளர்கள் சட்ட மசோதா; பேரூராட்சி, கிராமிய திட்ட சட்ட திருத்த மசோதா ஆகிய எட்டு சட்ட மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.

