குடகு மாவட்டத்துக்கு டிசம்பரில் 8 லட்சம் சுற்றுலா பயணியர் வருகை
குடகு மாவட்டத்துக்கு டிசம்பரில் 8 லட்சம் சுற்றுலா பயணியர் வருகை
ADDED : ஜன 02, 2025 06:22 AM
குடகு: ''கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் குடகு மாவட்டத்திற்கு 8 லட்சம் சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்,'' என, மாவட்ட சுற்றுலா துறை துணை இயக்குனர் அனிதா தெரிவித்துள்ளார்.
மலை பிரதேசமான குடகு மாவட்டத்தில் ஆண்டு முழுதும் அதன் இயற்கையையும், சீதோஷ்ண நிலையையும் ரசிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட சுற்றுலா துறை துணை இயக்குனர் அனிதா கூறியதாவது:
சுற்றுலா தலமான குடகிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது 2024லும் அதே நிலை தான் தொடர்ந்தது.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் எட்டு லட்சம் சுற்றுலா பயணியர் வருகை தந்துள்ளனர். இங்குள்ள 150 ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள், 4,000 ஹோம் ஸ்டேக்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இன்னமும் சுற்றுலா பயணியர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பல சுற்றுலா பகுதிகள் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டிச., 26ம் தேதி மட்டும், குஷால் நகரில் உள்ள நிசகர்தாம் பூங்காவுக்கு மட்டும், 6,000 பேர் வந்துள்ளனர். அதுபோன்று அப்பி நீர்வீழ்ச்சி, ராஜா சீட் பார்க்கவும் சுற்றுலா பயணியர் குவிந்தனர். குடகு வரலாற்றில் ஒரு மாதத்தில் எட்டு லட்சம் பேர் வருகை டிசம்பரில் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது குடகில் அனைத்து ஹோட்டல்களும் 'புல்' ஆகிவிட்டன. விரைவில் கூடுதலாக, புதிதாக 15 சதவீம் ஹோட்டல்கள், ரிசார்ட்கள் திறக்கப்பட உள்ளன. குஷால் நகரில் சுற்றுலா ஸ்தலம் பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதே காரணம்.
தினேஷ் கரியப்பா,
தலைவர்,
ரிசார்ட், ஹோட்டல், ரெஸ்டாரென்ட் சங்கம்.