ADDED : ஜன 20, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதியின் பங்காபுரா கிராமத்தில், 820 ஏக்கரில், 'ஓநாய்கள் சரணாலயம்' அமைந்து உள்ளது. மலைகள், இயற்கை குகைகள் அமைந்துள்ளன.
இங்கு அரிய வகை இந்திய கிரே ஓநாய்கள் உள்ளன. இதில், பெண் ஓநாய், கடந்த சில நாட்களுக்கு முன் எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த ஓநாய்களின் உயிர் பிழைக்கும் காலம் 50 சதவீதம் மட்டுமே.
குட்டிகளை காப்பாற்ற, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எட்டு குட்டிகளையும் சேர்த்து, 40 ஓநாய்கள் உள்ளன.
குட்டிகளை பொது மக்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.