ADDED : அக் 01, 2026 08:28 PM

புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 8 பள்ளி மாணவர்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவோகர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
புனே மாவட்டத்தில் உள்ள ஆளந்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தின் மூலம் 11, 12-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்கள் திவோகர் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்கள், கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த போது, கடல் அலையின் வேகம் காரணமாக, அவர்கள் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதனை பார்த்தவர்கள் கூச்சலிட்டனர், அதனை அறிந்து உடனே விரைந்த உள்ளூர் மக்கள், கடலில் மூழ்கிய 8 மாணவர்களையும் மீட்டு 'போர்லி' ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
