பாகிஸ்தானை நடுங்க வைத்த ஆபரேஷன் சிந்தூர் ; பயங்கரவாதிகள் 80 பேர் பலி
பாகிஸ்தானை நடுங்க வைத்த ஆபரேஷன் சிந்தூர் ; பயங்கரவாதிகள் 80 பேர் பலி
ADDED : மே 07, 2025 08:22 AM

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காம் சம்பவத்திற்கு நள்ளிரவு முதல் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கி இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல்வேறு நிலைகள் மீது துல்லியமாக ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
கோட்லி, பஹ்வல்பூர், முசாபர்பாத், பர்னாலா என மொத்தம் 9 பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது. இந் நிலையில் தாக்குதல் மூலம் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பயங்கரவாத முகாம்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களும் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாதிகள் பதுங்கிய நிலைகளை குறி வைத்து தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.