பவர்கிரிட் நிறுவனத்தில் 802 காலியிடங்கள்: பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
பவர்கிரிட் நிறுவனத்தில் 802 காலியிடங்கள்: பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
ADDED : அக் 23, 2024 07:18 AM

புதுடில்லி: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 802 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 12.
மத்திய மின்சாரத்துறையின் கட்டுப்பாட்டில், பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், டிப்ளமோ டிரெய்னி, ஜூனியர் ஆபிஸர் டிரெய்னி மற்றும் அசிஸ்டன்ட் டிரெய்னி ஆகிய பதவிகளுக்கு 802 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் ஆபிஸர் டிரெய்னி பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டன்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் B.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
டிப்ளமோ டிரெய்னி, ஜூனியர் ஆபிஸர் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300. அசிஸ்டன்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 200. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.