கிராமப்புற இளைஞர்களில் 82% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் : ஆய்வில் தகவல்
கிராமப்புற இளைஞர்களில் 82% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் : ஆய்வில் தகவல்
ADDED : அக் 11, 2024 02:10 AM

புதுடில்லி :நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 15 -- 24 வயதுக்குட்பட்ட இளவயதினரில் 82 சதவீதம் பேர், இன்டர்நெட் பயன்பாடு குறித்து அறிந்துள்ளதாக, மத்திய அரசின் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இது, 92 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் 'நேஷனல் சாம்பிள் சர்வே'யின் ஒரு பகுதியாக,கடந்த 2022ம் ஆண்டு ஜூலை முதல் 2023ம் ஆண்டு ஜூன் வரை அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில், கல்வி, சுகாதாரம், மக்களின் மருத்துவ செலவினம், மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுதும்மொத்தம், 3.02 லட்சம்குடும்பங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13லட்சம் நபர்களிடம்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
95 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கு
நாட்டில் 27 சதவீத இளவயதினர், மின்னஞ்சல், இன்டர்நெட் பேங்கிங் பயன்பாடு குறித்து அறிந்துள்ளனர்
78 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்ப தெரிந்துள்ளது
18 வயதுக்கு மேற்பட்டவர்களில்,95 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது
சராசரியாக 1 லட்சம் பேரில், 18,300 பேர், 500 ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளனர்
95.70 சதவீத குடும்பங்கள் துாய்மையான குடிநீர் பயன்படுத்துகின்றனர்
97.80 சதவீத குடும்பங்கள் கழிப்பறை வசதிகளை பயன்படுத்துகின்றனர்
93.70 சதவீத நகர்ப்புறவாசிகளுக்கு, 500 மீட்டர் தொலைவுக்குள் பொது போக்குவரத்து வசதி உள்ளது.