ரயில்வே தொழிற்சங்க தேர்தல் நிறைவு 2வது நாளில் 85 சதவீத ஓட்டுப்பதிவு
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் நிறைவு 2வது நாளில் 85 சதவீத ஓட்டுப்பதிவு
ADDED : டிச 06, 2024 06:52 AM

பெங்களூரு: ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நிறைவு பெற்றது. இரண்டாவது நாளில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மண்டலங்களில் 85 சதவீதம் ஓட்டு பதிவானது.
ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் நேரடியாக பேச்சு நடத்துவதற்காக ஏராளமான ரயில்வே தொழிற்சங்கங்கள் உள்ளன. இதில், அரசுடன் பேச்சு நடத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தல் டிசம்பர் 5, 6 ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி என மூன்று மண்டலங்களில் நேற்று முன்தினம், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடந்த தேர்தலில், ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஓட்டுக்களை பதிவு செய்தனர். மூன்று மண்டலங்களிலும் 90 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வெற்றி நம்பிக்கை
நேற்று முன்தினம் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மூன்று மண்டலங்களிலும் 55 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. நேற்று கடைசி நாள் என்பதால் ஊழியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வந்து, கடமையை ஆற்றினர்.
நேற்று 85 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தென்மேற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொது செயலர் ராகவேந்திரா கூறினார். வரும் 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து ரயில்வே ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.