sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 நாக்பூர் வெடி விபத்து 9 பேர் கைது

/

 நாக்பூர் வெடி விபத்து 9 பேர் கைது

 நாக்பூர் வெடி விபத்து 9 பேர் கைது

 நாக்பூர் வெடி விபத்து 9 பேர் கைது


ADDED : மார் 03, 2026 02:16 AM

Google News

ADDED : மார் 03, 2026 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாக்பூர்: மஹாராஷ்டிராவில், வெடி பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, அத்தொழிற்சாலையின் ஒன்பது இயக்குநர்களை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் நாக்பூர் அருகே ரவுல்கான் கிராமத்தில், 'எஸ்.பி.எல்., எனர்ஜி லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள, 'டெட்டனேட்டர் பேக்கிங்' பிரிவில் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், தொழிலாளர்கள் 19 பேர் பலியாகினர். காயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்துக்குள்ளான தொழிற்சாலையின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் என, 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஒன்பது பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us