சத்தீஸ்கரில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
சத்தீஸ்கரில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
UPDATED : செப் 03, 2024 01:54 PM
ADDED : செப் 03, 2024 01:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடியதாக தெரிகிறது. அவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.