விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து 9 பேர் பரிதாப பலி
விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து 9 பேர் பரிதாப பலி
ADDED : ஏப் 30, 2025 07:17 AM

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலில் சந்தன உற்சவ விழா நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது 20 அடி நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மீட்பு படை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்தில் 9 பேர் இறந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் நாங்கள் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது, என்றார்.