ADDED : பிப் 26, 2025 07:53 PM
கோவிந்தபுரி: 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக மைனர் கைது செய்யப்பட்டார்.
தென்கிழக்கு டில்லியில் கோவிந்தபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தெருவில் அழுது கொண்டிருப்பதாக சனிக்கிழமை அன்று அவரது தாயிடம் சிலர் கூறினர்.
அன்று பிற்பகல் வரை பள்ளிக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் தோழியருடன் விளையாடச் சென்றாள். 3ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. புகாரின்பேரில் போலீசார், சிறுமியை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மைனர் சிறுவனை கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.