மணிப்பூரில் 900 கூகி ஆயுதக்குழுவினர் ட்ரோன் தாக்குதலுக்கு திட்டம்: பாதுகாப்பு ஆலோசகர் ‛திடுக்'
மணிப்பூரில் 900 கூகி ஆயுதக்குழுவினர் ட்ரோன் தாக்குதலுக்கு திட்டம்: பாதுகாப்பு ஆலோசகர் ‛திடுக்'
ADDED : செப் 20, 2024 11:10 PM

இம்பால்: மணிப்பூரில் 900 கூகி ஆயதமேந்திய குழுவினர் ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என மணிப்பூர் அரசு ஆலோசகர் குல்தீப்சிங் ‛திடுக்' தகவலை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஆண்டு மே மாதம், கூகி - மெய்டி பிரிவினரிடையே இனக் கலவரம் வெடித்தது.இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு ஆயுதமேந்திய குழுக்கள் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு தாக்குதல் ,வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இதையடுத்து மணிப்பூர் அரசு பாதுகாப்பு ஆலோசகராக குல்தீப்சிங் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் அரசு ஆலோசகர் குல்தீப் சிங் இன்று செய்தியாளர்களுக்கு 'திடுக்' தகவலை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கிடைத்துள்ள ரகசிய உளவுத்தகவலின் படி கூகி இனத்தை சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர், அண்டை நாடான மியான்மர் வனப்பகுதியில் தீவிர ஆயதபயிற்சி மற்றும் ட்ரோன் மூலம் தாக்கதல் நடத்தும் பயிற்சி பெற்று மணிப்பூர் மாநிலத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர். இவர்கள் 30 குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ரகசிய தகவல் நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.