ஒரே நாளில் 96,000 பக்தர்கள்; சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்!
ஒரே நாளில் 96,000 பக்தர்கள்; சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்!
ADDED : டிச 20, 2024 09:16 PM

பத்தினம்திட்டா; சபரிமலையில் வரலாறு காணாத நிகழ்வாக நேற்று(டிச.,19) ஒரே நாளில் 96,007 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை யாத்திரை தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் நிறைவாக டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
மண்டல பூஜைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், அங்கு நாள்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந் நிலையில் வரலாறு காணாத வகையில் நேற்று (டிச.19) மட்டும் 96,007 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினமும் 70,964 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.