12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணி 97 சதவீதம் 'டிஜிட்டல்'
12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணி 97 சதவீதம் 'டிஜிட்டல்'
ADDED : டிச 06, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பீஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அ சாம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது.
இதில், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கும் தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்களில், மொத்தமுள்ள 51 கோடி வாக்காளர்களில், 50.92 கோடி பேரிடம் இருந்து கணக்கீட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன.
இதில் 49 கோடி வாக்காளர் பெயர்கள் டிஜிட்டலில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இது மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 97 சதவீதம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

