ADDED : அக் 16, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்ரதுர்கா : சித்ரதுர்கா, மொலகால்மூரு, ராம்புரா கிராமத்தில் வசித்த சிறுவன் மிதுன், 11. இவர் நேற்று முன்தினம், டியூஷன் முடிந்து, வீட்டுக்கு திரும்பும் போது தெரு நாய்கள் கடித்து குதறின. சிறுவனின் தலை, கன்னம், உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், நாய்களை விரட்டி சிறுவனை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தார்.
கூடுதல் சிகிச்சைக்காக, பல்லாரியின் விம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தார்.

