துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; குண்டு பாய்ந்து சிறுவன் பலி
துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; குண்டு பாய்ந்து சிறுவன் பலி
ADDED : பிப் 12, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாண்டா: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தின் மத்துவாந்த் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது.
வட மாநிலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீக் சுக்லா என்பவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார்.
அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, ஷாம்பு சுக்லா, 5, என்ற சிறுவன் மீது பாய்ந்தது.
இதில், அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார், பிரதீக் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.