பலாத்காரம் செய்து பெண் கொலை தப்ப முயன்ற கொடூரன் சுற்றிவளைப்பு
பலாத்காரம் செய்து பெண் கொலை தப்ப முயன்ற கொடூரன் சுற்றிவளைப்பு
ADDED : ஆக 01, 2025 09:56 PM

பாலக்காடு:பெண்ணை பலாத்காரம் செய்து, கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மீனாட்சிபுரம், பட்டஞ் சேரியை சேர்ந்தவர் சுப்பையன், 40. இவர், பாலக்காடு கோட்டை மைதானம் பகுதியில் குப்பை சேகரித்து வந்தார்.
இவர், மாவட்ட அரசு மருத்துவமனையில், ஜூலை 30 இரவு, 46 வயது பெண்ணை, தன் மனைவி எனக்கூறி படுகாயத்துடன் அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி பெண் இறந்தார்.
டாக்டர்கள் விசாரித்த போது, சுப்பையன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம்அடைந்தனர்.
இதுபற்றி, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், சுப்பையனிடம் நடத்திய விசாரணையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்து, பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கை து செய்தனர்.
போலீஸ் இன்ஸ் பெக்டர் விபின்குமார் கூறியதாவது:
வழியோரங்களில் கிடக்கு ம் பழைய பொருட்கள் எடுத்து விற்று வாழ்ந்து வந்த பெண்ணை, அதே தொழிலில் ஈடுபட்டுள்ள சுப்பையன் பின் தொடர்ந்து சென்று, பாலக்காடு ஸ்டேடியம் பைபாஸ் அருகிலுள்ள புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது, பெண்ணின் உடலில் காய ம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண்ணில் மூக்கு, வாயை துணியால் பொத்தியதில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதில், மயங்கிய பெண்ணை, ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து த ப்ப முயன்ற சுப்பையனை , டாக்டர்கள் தகவலில் கைது செய்தோம்.
இவ்வாறு, அவர் கூறி னார்.

