வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / வாரிசு அரசியலை ஒழிக்க அழைப்பு! / வாரிசு அரசியலை ஒழிக்க அழைப்பு!
/
செய்திகள்
வாரிசு அரசியலை ஒழிக்க அழைப்பு!
ADDED : ஜன 13, 2024 01:34 AM
மஹாராஷ்டிராவின் நாசிக்கில், 27வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:மஹாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் ராமர், பஞ்சவடி பகுதியில் தங்கிஇருந்தார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் துாய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என, மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த சக்தி தான் நம் பலம். விரைவில் நாம், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் துாதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி உள்ளனர். இன்றைய இளைஞர்கள் தங்கள் கருத்துகளை ஓட்டு வாயிலாக வெளிப்படுத்தினால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஜனநாயக செயல்பாட்டில் இளைஞர்கள் சிறப்பாக பங்கேற்பது, நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும். முதன்முறை வாக்காளர்களால், நாட்டின் ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும், சக்தியையும் கொண்டு வர முடியும். இளைஞர்களாகிய நீங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டால், நாட்டிற்கு கேடு விளைவிக்கும் வாரிசு அரசியலின் செல்வாக்கை குறைக்க முடியும். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவியுங்கள். போதைப் பொருட்களில் இருந்து விலகி இருங்கள். பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மஹாராஷ்டிரா வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மும்பை விமான நிலையம் துவங்கி, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாசிக் சென்ற அவர், ஹோட்டல் மிர்ச்சி சவுக்கில் இருந்து, சுவாமி மஹராஸ் சவுக் வரை சாலை மார்க்கமாக சென்றார். வழிநெடுகிலும் இருபுறமும் குவிந்திருந்த தொண்டர்கள் பிரதமரை பார்த்து கையசைத்தனர். பின், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்ற மோடி, கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட பாரம்பரிய தலைப்பாகை அணிந்து, அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார்; பின், மடாதிபதிகளையும் சந்தித்து பேசினார். இதையடுத்து, ராமாயணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய பஞ்சவடி பகுதியில் உள்ள கல்ராம் கோவிலிலும் பிரதமர் வழிபட்டு பிரார்த்தனை செய்தார். அங்கு சந்த் ஏக்நாத் மகரிஷி மராத்தி மொழியில் எழுதிய பவர்த்த ராமாயணத்தின் வசனத்தையும் மோடி கேட்டார். பின் கோதாவரி நதிக்கரையை ஒட்டியுள்ள கோவிலில் துாய்மை பணியில் பிரதமர் ஈடுபட்டார்.