ADDED : நவ 11, 2024 05:11 AM

சிக்கபல்லாபூர்: அமைச்சர் எம்.சி.சுதாகர் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக உயர்கல்வி அமைச்சர் எம்.சி., சுதாகர். சிக்பல்லாபூர் சிந்தாமணி தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். சிந்தாமணி டவுனில் சுதாகரின் வீடு உள்ளது.
நேற்று முன்தினம் மாலை அமைச்சரின் வீட்டின் அருகில், ஒரு ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டது. காரை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
நேற்று காலை 6:00 மணியளவில் காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்து, காரின் தீயை அணைத்தனர்.
காரின் வாகன பதிவு நம்பரை வைத்து, அதன் உரிமையாளர் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். அமைச்சர் வீட்டின் அருகே கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.