ADDED : பிப் 15, 2026 11:53 PM

'லாட்லி பெஹ்னா திட்டம்' மூலம் பெண்களின் நலனை காப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. தங்களுக்கு 1 ரூபாய் கிடைத்தாலும் அதை குடும்பத்திற்காக செலவிடும் பெண்களை, இத்தொகையை மது குடிக்க பயன்படுத்துவதாக காங்கிரசார் தரக்குறைவாக பேசுகின்றனர். அவர்களுக்கு எதிராக ஓட்டளிப்பதன் மூலம் பழிவாங்க வாய்ப்பு கிடைக்கும்.
மோகன் யாதவ், ம.பி., முதல்வர், பா.ஜ.,
விவசாயிகளுக்கு துணை நிற்கும்!
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால், நம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும். இதற்காக, பல்வேறு கேள்விகளை எழுப்பும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது மத்திய அரசு குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. அதற்கு பதிலாக, இதில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பவன் கெரா செய்தி தொடர்பாளர், காங்.,
மக்கள் ஏற்கமாட்டார்கள்!
அமெரிக்க அரசுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரசின் ராகுல் பரப்பி வருகிறார். விவசாயிகளை, தவறாக வழிநடத்தும் வகையில் உள்ள இவரது கருத்துகள், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த பயத்தை துாண்டும் வகையில் உள்ளன. ஆனால், மக்கள் யாரும் இக்கருத்தை ஏற்கமாட்டார்கள்.
சி.ஆர். கேசவன் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

