ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்பு
ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்பு
UPDATED : ஜன 01, 2025 08:50 PM
ADDED : ஜன 01, 2025 07:43 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், விழுந்த 3 வயது பெண் குழந்தை 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த 2023 டிச.,23ம் தேதியன்று சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டு இருந்த போது கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் , தேசிய மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜன. 01) இரவு குழந்தை மாக மீட்டு சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

