sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வந்தது ஆபத்து தொழிற்பேட்டை பெயரில் அழிக்க சதி

/

சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வந்தது ஆபத்து தொழிற்பேட்டை பெயரில் அழிக்க சதி

சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வந்தது ஆபத்து தொழிற்பேட்டை பெயரில் அழிக்க சதி

சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வந்தது ஆபத்து தொழிற்பேட்டை பெயரில் அழிக்க சதி


ADDED : ஜன 10, 2025 07:24 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுாற்றாண்டுகளுக்கு முன்னர், பிரிட்டன் நாட்டினர், தங்கவயலில் இருந்த போது வெளிநாட்டு, இந்திய மரங்களை பராமரித்து வளர்த்தனர். ஒரு மினி பிரிட்டனை உருவாக்கினர்.

நாட்டில் வேறெங்குமே காண முடியாத பலவகையான உயர் ரக மரங்கள் ஆங்கிலேயர் வசித்த பங்களாக்களில் வளர்க்கப்பட்டன. குறிப்பாக வெண் தேக்கு, பர்மா தேக்கு, ரோஸ் வுட், அசோகா, கிறிஸ்துமஸ் மரங்கள், சந்தனம், மூங்கில், பூவரசம், சாலையெங்கும் மே மாதத்தில் பூக்கும் செம்மரம்.

ஆல், அத்தி, நாவல், வேம்பு, அரச, புளிய மரங்கள் விளாம்பழம், கொடுக்காபுளி என பல வகையான மரங்கள் தங்க வயலில் வளர்க்கப்பட்டன. ஆனால், காலத்தின் போக்கில் பலவகையான மரங்களும், அழகிய கட்டடங்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டன.

1வது வார்டு


இந்நிலையில், தங்கவயலில் சுத்தமான காற்றுக்கும், சுகாதாரத்துக்கும் தேவையான வசதிக்கேற்ப மரங்கள் தேவைப்பட்டன. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், தங்கவயல் நகராட்சியின் 1வது பெமல் தொழிற்சாலை வார்டில் பயன்படுத்தாமல் வைத்திருந்த நிலத்தின் ஒரு பகுதியான 40 ஏக்கரில் பாபா சாஹேப் அம்பேத்கர் சுற்றுச் சூழல் பூங்காவை 2017ல் பெமல் தொழிற்சாலையின் தோட்டக் கலைத் துறையினர் ஏற்படுத்தினர்.

இதில், பெங்களூரு கப்பன் பூங்கா போன்று மரங்களை வளர்க்க, பெமல் தோட்டக்கலைத் துறையினர் மரக்கன்றுகளை நட்டனர். இங்கு, நாட்டு மரங்களான வேம்பு, தைலம், அரசு, ஆல், நெல்லிக்கனி, புளிய மரங்கள், வனப் பகுதியில் உள்ள பல வகையான மரக்கன்றுகளை நட்டு கண்காணித்தனர். உடல் ஆரோக்கியத்திற்கேற்ற பலவகையான மூலிகை செடிகள், மரங்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன.

அதிர்ச்சி


பெமல் தொழிற்சாலை அதிகாரிகள், தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினர் நடைபயிற்சிக்கும், ஓய்வெடுக்கவும் சிறந்த பூங்காவாக இது திகழ்ந்தது. இந்த பூங்காவை அழிக்க ஆபத்தாக வந்த அரசுஉத்தரவு, பெமல் நகர் பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பூங்காவில் கர்நாடக தொழில் வளர்ச்சித்துறை, 'தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்கும் இடம்' என பெயர் பலகை வைத்துள்ளனர். அத்துமீறி யாரும் உள்ளே நுழைய கூடாதென்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

அரசின் உள் நோக்கமா?

பெமல் தொழிற்சாலை அருகே, கர்நாடகா சமூக நலத்துறை, அம்பேத்கர் பவன் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. அந்த இடத்தை திடீரென வாபஸ் பெற்று, அங்கு கர்நாடக தொழில் வளர்ச்சி துறையின் இடம் என பெயர் பலகை வைத்துள்ளனர்.

இதையடுத்து, அம்பேத்கர் பெயரில் உள்ள பூங்காவையும் கூட கர்நாடக தொழில் வளர்ச்சித் துறை ஏற்றுள்ளதாக பெயர் பலகை வைத்துள்ளது. இதனால் இந்த அரசு, அம்பேத்கர் பெயரை மறைக்கும் செயலில் ஈடுபடுவதாக பலரும்குமுறுகின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us