அர்ப்பணிப்போடு செயல்படும் இயக்கம்: ஆர்.எஸ்.எஸ்.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அர்ப்பணிப்போடு செயல்படும் இயக்கம்: ஆர்.எஸ்.எஸ்.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ADDED : அக் 12, 2024 08:58 PM

புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., எப்போதும் நாட்டிற்காக, அர்ப்பணிப்போடு இயங்கும் இயக்கம். நூற்றாண்டை கடந்துள்ள அதன் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்' என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
விஜயதசமி திருநாளான இன்று, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் இன்று ஆற்றிய உரையில், ஆர்.எஸ்.எஸ்., 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டு முக்கியமானது. நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேறி வருகிறது என்றார்.
இந்த உரை மிகவும் முக்கியம் வாய்ந்தது.
பா.ஜ.,வில் சேர்வதற்கு முன் நான், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக இருந்தேன். அந்த அமைப்பின் உறுதியும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிப்பதாக உள்ளது. முன்னேறிய இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைவதில் எனக்கு, புதிய ஆற்றலைப் புகுத்துவதாகவும் அமைகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

