வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!
ADDED : அக் 21, 2024 09:38 AM

புதுடில்லி: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 48 மணி நேரத்தில், புயலாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்.
நாளை மறுநாள் வலுவடைந்து 'டானா' புயலாக வலுப்பெறும். அக்.,24ம் தேதி மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி, 'டானா' புயல் கரையைக் கடக்கக்கூடும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்.

