ADDED : அக் 13, 2024 11:10 PM

பல்லாரி: நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர் ஒருவர், கரடி வேடம் அணிந்து வந்திருந்தார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பல்லாரி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தர்ஷனை பார்க்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் வருகின்றனர்.
அவரது மனைவி உட்பட குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் பார்த்து சென்றனர்.
ஷிவமொக்கா மாவட்டம், சாகரை சேர்ந்தவர் கார்த்திக், தீவிர தர்ஷன் ரசிகர். தர்ஷனை பார்ப்பதற்காக நேற்று ஹிண்டல்கா சிறைச்சாலைக்கு மஞ்சள் நிறத்தில் 'கரடி பொம்மை' உடை அணிந்து வந்திருந்தார்.
அத்துடன் கையில் வைத்திருந்த பதாகையில் 'டி பாஸ்' சிறையில் இருந்து விரைவில் வெளியே வர வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அங்கிருந்த போலீசாரிடம், தர்ஷனை பார்க்க அனுமதி கேட்டார். 'விடுமுறை தினத்தில் சிறையில் உள்ளவரை பார்க்க, வெளியாட்களுக்கு அனுமதியில்லை' என தெரிவித்தனர்.
சிறிது நேரம் அங்கிருந்த கார்த்திக், பின் புறப்பட்டு சென்றார்.
சிறையில் இருக்கும் தர்ஷனை பார்க்க கரடி உடையில் வந்த ரசிகர்.