தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்: அபிஷேக் சர்மா சதம்

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்: அபிஷேக் சர்மா சதம்

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்: அபிஷேக் சர்மா சதம்


UPDATED : ஏப் 13, 2025 12:04 AM

ADDED : ஏப் 12, 2025 08:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2025 12:04 AM ADDED : ஏப் 12, 2025 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: அபிஷேக் சர்மா சதம் விளாச ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (36 ரன், 4 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (42 ரன், 7 பவுண்டரி) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கம்மின்ஸ், ஜீஷான் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஷ்ரேயாஸ், முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 22 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது எஷான் மலிங்கா பந்தில் நேஹல் வதேரா (27) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஷ்ரேயாஸ், மலிங்கா வீசிய 17வது ஓவரில் 4 பவுண்டரி அடித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 18வது ஓவரில் மேக்ஸ்வெல் (3), ஷ்ரேயாஸ் (82 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். ஷமி வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 4 சிக்சர் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (34), யான்சென் (5) அவுட்டாகாமல் இருந்தனர். சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி கலக்கல் துவக்கம் தந்தது. யான்சென் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரி விரட்டினார் அபிஷேக். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார் ஹெட். மேக்ஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அபிஷேக், 19 பந்தில் அரைசதம் விளாசினார். சகால் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹெட், 31 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்த போது சகால் 'சுழலில்' ஹெட் (66 ரன், 3 சிக்சர், 9 பவுண்டரி) சிக்கினார்.

பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த அபிஷேக், 40 பந்தில் சதத்தை எட்டினார். சகால் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட அபிஷேக் (141 ரன், 10 சிக்சர், 14 பவுண்டரி), அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' வெளியேறினார். சஷாங்க் சிங் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கிளாசன், யாஷ் தாகூர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.ஐதராபாத் அணி 18.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 247 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிளாசன் (21), இஷான் கிஷான் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us