ADDED : செப் 21, 2024 06:52 AM

செய்முறை:
அடி கனமான வாணலியில் நெய், பால் மற்றும் பால் பொடியை போட்டு மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளற வேண்டும். கட்டிகள் இல்லாமல் கிளற வேண்டும். சில நிமிடங்களில் கலவை கெட்டியாகும். இதில் ஏற்கனவே பொடித்து வைத்த சர்க்கரையை போட வேண்டும்.
சிறிது நேரம் கிளறிக் கொண்டே இருந்தால், மாவு, உருண்டை பதத்துக்கு திரண்டு வரும். இதில் ஏலக்காய் பொடி, உலர்ந்த கொப்பரைத் துருவல், நெய் ஆகியவற்றைப் போட்டு கிளற வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், அடுப்பை அணைத்து வாணலியை கீழே இறக்கி கலவையை தேவையான அளவுக்கு உருண்டைகளாக பிடித்து, கொப்பரை துருவலில் பிரட்டி எடுத்து, தட்டில் அடுக்கி வைக்கலாம். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
பால் பொடி - ஒரு கப்
கொப்பரை துருவல் - 1/2 கப்
பொடித்த சர்க்கரை- 1/4 கப்
பால்- 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 கப்
நெய் - 2 ஸ்பூன்