புதுடில்லியில் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆதமி, பா.ஜ., இடையே கடும் போட்டி
புதுடில்லியில் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆதமி, பா.ஜ., இடையே கடும் போட்டி
ADDED : டிச 07, 2024 09:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரியில் நடக்கவுள்ளது. இரண்டாவது முறையாக ஆளும் ஆம் ஆத்மி மற்றும் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இரு கட்சிகளும் பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஆம் ஆத்மி 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையே அறிவித்து விட்டது. டில்லி பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்து, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்தும் கேட்கும் பிரசார வேன்களையும் துவக்கியது.
டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில், தேர்தல் அலுவலகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பா.ஜ., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.