ADDED : பிப் 07, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே சிவபுரி பகுதியில், இந்திய விமானப்படை போர் விமானம் பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தது.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட, 'மிராஜ் 2000' வகை போர் விமானமான இதில், இரு பைலட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானது.
சிவபுரி பகுதியில் வயல் வெளியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானம், முற்றிலும் தீப்பற்றி எரிந்தது.
முன்னதாக விமானத்தில் இருந்த பைலட்கள் இருவரும் பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினர். இதில், அவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இருவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.