அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றிய டாக்டர் குழுவுக்கு குவியும் பாராட்டு
அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றிய டாக்டர் குழுவுக்கு குவியும் பாராட்டு
UPDATED : மே 30, 2024 09:08 AM
ADDED : மே 30, 2024 07:48 AM

திருச்சூர்: கேரளாவில் அரசு பஸ்சில் பயணித்த பெண் திடீரென பிரசவ வலியால் அலறி துடித்ததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்; அப்போது பெண்ணின் நிலைமை மோசமானதால் சற்றும் யோசிக்காத டாக்டர், நர்ஸ், அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றி பிரசவம் பார்த்த 'வீடியோ' அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே, அங்கமாலியில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சில், 37 வயது பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்த டிரைவர், மருத்துவமனை நோக்கி பஸ்சை செலுத்தினார். ஆனால், பெண்ணின் நிலைமை மோசமாக, டாக்டரும், நர்சும் பஸ்சில் ஏறி அங்கேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளை குவித்து வருகிறது.