ADDED : பிப் 16, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேராடூன், நாட்டில் முதல்முறை யாக, அவசர மருத்துவ சேவைகளுக்கான ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி, உத்தரகண்டில் விரைவில் துவங்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டிலேயே முதல்முறையாக, அவசர மருத்துவ சேவைகளுக்கான ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி உத்தரகண்டில் விரைவில் துவங்கப்பட உள்ளது' என தெரிவித்துள்ளார்.
இதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறுத்தப்படும் ஹெலிகாப்டர், 150 கி.மீ., சுற்றளவில் எங்கு விபத்து அல்லது அவசர மருத்துவ தேவை ஏற்பட்டாலும், அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.