ஒரே அடி...! சிறுத்தையை கம்பால் அடித்து கொன்ற ‛வீர' விவசாயி
ஒரே அடி...! சிறுத்தையை கம்பால் அடித்து கொன்ற ‛வீர' விவசாயி
ADDED : அக் 18, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஜ்னோர்: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்கா அருகே அமைந்துள்ளது பிக்காவாலா கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி தேக்வீர் சிங், 60; அங்குள்ள வயலில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்கி அருகேயுள்ள புதருக்குள் இழுத்து செல்ல முயன்றது. சிறுத்தையுடன் போராடிய அவர், அருகே கிடந்த கம்பை எடுத்து சிறுத்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயமடைந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேக்வீரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.