ADDED : டிச 15, 2024 11:27 PM

சட்டசபை தேர்தல் தோல்வியால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் கமிஷன், ஜனநாயகம் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, அரசியலமைப்பு சட்டத்தை கூட, அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.
தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,
திசை திருப்பும் முயற்சி!
தன் தோல்விகள் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே, முன்னாள் பிரதமர் நேருவின் பெயரை, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயன்படுத்துகிறார். நேரு இல்லை என்றால், தன் தவறுகளை மறைக்க மோடி என்ன செய்வார்?
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
காங்., இரட்டை வேடம்!
உண்மையை யாராவது பேசி விட்டால், எதிர்க்கட்சிகள் கொதித்தெழுகின்றன. உடனே, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்கட்சிகள் தீர்மானத்தை தாக்கல் செய்கின்றன. அரசியலமைப்பு பற்றி வாய் கிழிய காங்., பேசுகிறது. ஆனால், அக்கட்சியின் இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் அறிவர்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,