ADDED : நவ 14, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு; பெங்களூரு கெம்பகேவுடா சர்வதேச விமான நிலையத்தை பார்த்து ஜப்பானிய பெண் வியப்படைந்தார்.
ஜப்பானிய பெண் சுற்றுலா பயணியும், 'இன்ஸ்டாகிராம்' பிரபலமுமான, கி.கி.சென், உலகம் முழுக்க பயணம் செய்து, அதனை வீடியோவாக பதிவிடுவது வழக்கம்.
பெங்களூரு கெம்பகேவுடா விமான நிலையத்திற்கு, சமீபத்தில் வந்திருந்த அவர், சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பார்வையிட்டார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மூங்கில்களால் செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்புகள், வசதியான இருக்கைகள், பல வகையான உணவுகள் ஆகியவற்றை பார்த்து வியப்படைந்தார்.
'இது போன்ற ஒரு விமான நிலையம் இந்தியாவில் உள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம், பெங்களூரு தான்' என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.