ADDED : அக் 12, 2024 07:10 AM

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடாவில் வீடு புகுந்து திருடிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது, போலீசார் பிடியில் இருந்த பிடிபட்டவர் தப்பியோடினார்.
தட்சிண கன்னடா மாவட்டம், சுல்லியாவில் சில நாட்களுக்கு முன்பு, சம்பாஜேயில் வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த தங்க நகைகள், பொருட்களை திருடிச்சென்றனர்.
இது தொடர்பாக, சுல்லியா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், தமிழகத்தின் கார்த்திக், 38, நரசிம்மன், 40, ஹாசனின் யதுகுமார், 33, தீட்சித், 26, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய, அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரை தள்ளிவிட்டு, கார்த்திக் என்பவர் அங்கிருந்து தப்பினார்.
அங்கிருந்தவர்கள் முயற்சித்தும் அவரை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால், 94808 05365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.