ADDED : ஜன 02, 2025 09:31 PM
பாபா நகர்: புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய டில்லியின் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோஹித், 35. செவ்வாய்க்கிழமை இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க முடிவு செய்து, தனக்கு பழக்கமான நான்கு பேருடன் சேர்ந்து, மோஹித் மது அருந்தினார்.
இந்த விருந்து நள்ளிரவை தாண்டியும் நீடித்துள்ளது. அதிகாலை 3:30 மணி அளவில் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட வார்த்தை மோதலால் மோஹித்தை நான்கு பேரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
அங்கிருந்து நான்கு பேரும் தப்பியுள்ளனர். படுகாயமடைந்த மோஹித், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். தங்களை சிறுவர்கள் என அவர்கள் கூறி வருகின்றனர். அதனால் அவர்கள் வயது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.