ADDED : அக் 11, 2024 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் மனோஜ். இவர் பலரிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, நேற்று முன்தினம் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், மூணாறு அருகே சித்திராபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு தகுதி சான்றிதழ் வழங்க, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். விடுதி நிர்வாகம், 75,000 ரூபாய் வழங்க முன் வந்தது.
அத்தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்த விடுதி மேலாளர், அவர்கள் கூறிய அறிவுரையின்படி தொகையை வழங்கினார்.
அது தொடர்பாக விசாரித்த இடுக்கி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், மனோஜை நேற்று கைது செய்தனர்.